Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் கோட்டையில் யூசுப் பதான் போட்டி! மம்தா மோடியைக் கண்டு அஞ்சுவதாக காங். பதிலடி

யூசுப் பதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பற்றிக் கருத்து தெரிவித்திருக்கும் சௌத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் யூசுப் பதானை கௌரவிக்க விரும்பினால், அவரை ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Yusuf Pathan vs Adhir Ranjan Chowdhury? Trinamool Announcement Sparks Buzz sgb
Author
First Published Mar 10, 2024, 8:58 PM IST

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் பஹரம்பூர் தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறக்கப்படுவது பேசுபொருளாகியுள்ளது.

இதுவரை மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. இப்போது பஹரம்பூர் தொகுதி எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் ஒருமுறை அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதியில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானைக் களமிறக்குவதாக அறிவித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஐந்து முறை பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆகியிருக்கிறார்.

யூசுப் பதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பற்றிக் கருத்து தெரிவித்திருக்கும் சௌத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் யூசுப் பதானை கௌரவிக்க விரும்பினால், அவரை ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதலா... புடினிடம் பேசி தடுத்து நிறுத்திய பிரதமர் மோடி!

Yusuf Pathan vs Adhir Ranjan Chowdhury? Trinamool Announcement Sparks Buzz sgb

"வங்காளத்தில் இருந்து வெளி மாநிலத்தவர்கள் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் யூசுப் பதானை கவுரவிக்க விரும்பினால், அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியிருக்க வேண்டும். மம்தா பானர்ஜிக்கு நல்ல எண்ணம் இருந்தால், யூசுப் பதானுக்கு குஜராத்தில் இடம் ஒதுக்கீடு செய்யுமாறு இந்தியா கூட்டணியிடம் கேட்டிருப்பார். ஆனால் காங்கிரசை பாஜக தோற்கடிக்க உதவவும் வகையில் இங்கு அவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார்" என்றார்.

தன்னைப் போன்ற தலைவரை எந்த அரசியல் கட்சியும் நம்பக்கூடாது என்பதை திருமதி மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

"மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால், மோடி ஜி அதிருப்தி அடைந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இருக்கிறார். இந்தியா கூட்டணியில் இருந்து தன்னைப் விலகியதன் மூலம் தான் பாஜகவுக்கு எதிராக நிற்கவில்லை பிரதமர் அலுவலகத்துக்கு செய்தி அனுப்பியுள்ளார்." என்றும் சவுத்ரி விமர்சித்துள்ளார்.

இதனிடையே, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தற்காக மம்தா பானர்ஜிக்கு யூசுப் பதான் நன்றி தெரிவித்துள்ளார். "மக்கள் பிரதிநிதியாக, ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களை மேம்படுத்துவது நமது கடமை. அதைத்தான் நான் சாதிக்க விரும்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜக அல்லாத மற்ற கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள்... என்னிடம் பல புகார்கள் வந்துள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை

Follow Us:
Download App:
  • android
  • ios