Asianet News TamilAsianet News Tamil

4 அமைச்சர்களை தவிர.. 12 - 18% கமிஷன் கேட்குறாங்க.. இது நியாயமா? பொங்கி எழுந்த சேலம் பாமக MLA அருள்!

எந்த ஒரு திட்டத்திற்கும் 12 - 18% கமிஷன் கேட்பதாக சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பாமகவை சேர்ந்தவருமான அருள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி அதிர வைத்துள்ளார்.

Salem West Assembly Constituency Member Arul accused the DMK ministers of asking 12-18% commission for any project-RAG
Author
First Published Jun 17, 2024, 2:54 PM IST | Last Updated Jun 17, 2024, 2:54 PM IST

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கடிதத்தில், “கடந்த 3 ஆண்டுகளாக எம்எல்ஏ பதவி உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற செய்தார்கள். இப்ப திமுகவுக்கு பெரிய வேலை வந்தாச்சு நானும் உங்களைப் போல நமக்கு இட்டு போட்ட மக்களது வேலைக்காரன் என்ற எண்ணத்தோடு ஊர் ஊராக, தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கிறேன். மனுக்களை வாங்குகிறேன். மக்களின் பொதுவான கோரிக்கைகளைக் கேட்கிறேன் இருப்பீர்கள்.

நான் எழுதும் கீழ்கண்ட கருத்துக்கள் அனைவரையும் அரவணைத்து பாராட்டும்படி செயல்படும் 4 அமைச்சர்கள் தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் பொருந்தும்.. காபி சாப்பிட்டியா ? என்னோடு நீ டிபன் சாப்பிட்டே ஆக வேண்டும் என அன்பொழுக பேசி சாப்பிட்டு முடித்து, அண்ணா ஒரு வேலை என்றால் கொடு. ஏ PA இத உடனே செய்து கொடு எனும் போது நமது காதில் தேன் பாய மகிழ. நான் கொடுத்த ஏதும் இதுநாள் வரை நடக்கல. உங்களுக்கு ஏதாவது நடந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

சில அமைச்சர்களிடம் நாம் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து நேரடியாக யாருக்காக பரிந்துரைக்கிறோமோ அவர்களிடமே அமைச்சர்களது உதவியாளர்கள் நேரடியாக டீல் (அதாங்க டீல் (புரிஞ்சுதுல்ல) செய்து MLA வான நம்மை அவமானப்படுத்திய நிகழ்வு மதுரையைச் சேர்ந்த பத்திரமானவர் உள்ளிட்ட பலரால் எனக்கு ஏற்பட்டது. இதே வேலையா போச்சு.. கண்டிப்பாக தட்டிக் கேட்கணும்! அமைச்சர்களுக்கே வெளிச்சம், முன்னாள் எம்எல்ஏ இது என்ன? கேட்டேன். 

அவர்கள் சொன்னது வியப்பை தந்தது. கடந்த திமுக, அதிமுக இருகட்சி ஆட்சியிலும் மந்திரிங்ககிட்ட போயி ஏதாவது பரிந்துறை கொடுத்தா சபை நடக்கும் போது பேரவையில் நம்ம சீட்டுல. ஓட்டிய கவரில் ஆர்டர் இருக்கும். செய்ய முடியவில்லை என்றால் போன் போட்டு கூப்பிட்டு இது குறித்து அமைச்சர் விளக்கமா சொல்வாரு என்றார். ஆனால் இதுவரை ஒருநாள் கூட எனக்கு இந்த அனுபவம் இல்லை. உங்களுக்கு? பழையவர்கள் பலர் இருந்தும் மாறிவிட்டார்கள்.

Best SIP to invest in 2024 : 2024 இல் எஸ்ஐபியில் முதலீடு செய்ய டாப் 10 மியூச்சுவல் ஃபண்டுகள் இவைதான்..!

இன்று உள்ளவர்கள் போட்டி போட்டுக்கிட்டு 12 முதல் 18 வரைக்குறாங்க. குறைத்து கொள்ளுங்கண்ணா, மேல கை காட்டுறாங்க. எல்லாத்துக்கும் தனித்தனி என வேதனையை ளிப்படுத்துறாங்க. இதை நான் சொல்லவில்லை. இவைகளை எல்லாம் ஏன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று உங்கள் மாவட்ட அமைச்சர் உங்களுக்கு நெருக்கமானவராக இருக்கலாம். அவரும் நம்மைப்போல MLA வாகி பின்னரே அமைச்சரானார் என அவரிடம் எடுத்து சொல்லுங்கள். இன்றைய அமைச்சர் நாளையே வெறும் MLA இதலாம். அவருக்கும் நம் நிலை ஏற்படக் கூடாது என எடுத்துச் கொல்லுங்கள். 

என்னது மாத்த போறீங்களா? ‘சட்டத்தை’ கையிலெடுத்த ராகுல் காந்தி! இப்போ சேல்ஸ் பிச்சுகிட்டு போகுதாமே! அமைச்சர்கள் நமக்கு தரும் மரியாதை இதுதான் என்றால் அதிகாரிகள் தரும் மரியாதை மிக சிறப்பு. நல்ல பல அதிகாரிகளுக்கு மத்தியில் சிலரை நாம் (எம்.எல்.ஏ.க்கள்) சந்திக்கும் போது கூட்டத்தில் இருக்கும் என சந்திக்க மறுக்கிறார்கள். சமீபத்தில் ஒரு மிக உயர் அதிகாரியிடம் தலைமைச் செயலகத்தில் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்றேன். அவர் மறுத்துவிட்டார். 

ஏங்க MLAக்கு படம் எடுக்க தகுதி இல்லையா? அவருக்கு முன் இருக்கையில் அப்போது அமர்ந்து இருந்த அந்த நேர்மையான உயர் அதிகாரியே அதற்கான காட்சி. இது தான் இன்றைய மக்களாட்சி . நமக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு இந்த 5 வருடங்களில் ஏதாவது செய்து கொடுத்தால் தானே மீண்டும் அவர்களின் முகத்தில் விழிக்க முடியும். தேர்தலில் நாம் செய்த செலவுகள், அதனால் நமக்கு ஏற்பட்ட கடன்கள் குறித்து இங்கு நான் ஈனும் குறிப்பிட விரும்புகிறோம். 

என் மனதில் இருக்கும் இந்த பல வேதனைகள் உங்களுக்கும் இருக்கும் என்பதை நான் அறிவேன். அப்படிஇல்லை என்றால் நீங்கள் ஆளும் கட்சி மாவட்ட செயலாளராக இருப்பீர்கள் இந்த கூட்டத்தொடரில் ஆளும்கட்சி, எதிர் கட்சி, கூட்டணி கட்சி, கூட்டணி இல்லா கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து எம்எல்ஏக்களும் மாண்புமிகு முதல்வரிடம் முறையிட்டு நமக்கு அமைச்சர்களால் ஏற்படும் புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் ஒன்றாகவோ, தனித்தனியாக வோ, வாய்ப்பு கிடைக்கும் போது தனிமையிலோ, சபையிலோ முதல்வர் அவர்களது செயலாளர்கள், உதவியாளர்கள் மூலமோ எடுத்துரையுங்கள்.

நேரில் சொல்ல முடியாவிட்டால் முதல்வர் அவர்களுக்கு கடிதமாவது கொடுங்கள். பேரவையில் உள்ள 234 MLAக்களும் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்பதை அமைச்சர்களுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மூலமாக உணர்த்துவது அவசியம். எம்.எல்.ஏ.க்கள் குறைந்தபட்ச உரிமையை மரியாதையை காப்போம்” என்று கூறி அதிரவிட்டுள்ளார் பாமகவை சேர்ந்த எம்.எல்.ஏ அருள்.

டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios