சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது பின்னணியில் பொன்முடியின் தலையீடு - அண்ணாமலை குற்றச்சாட்டு

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தலையீடு இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

salem periyar university vice chancellor was illegally arrested by tamil nadu police says bjp state president annamalai vel

சேலம் மாவட்டத்தில் சேலம் பாராளுமன்ற தொகுதி பாஜக அலுவலகத்தை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடிக்கு பிரமாண்டமான முறையில் தமிழகத்தில் வரவேற்பு அளித்தார்கள். தமிழகத்தில் எந்தளவிற்கு எழுச்சி உள்ளது என்று பிரதமர் மோடி பார்த்தார்.

சேலத்தில் தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மானமுள்ள எந்தத்  தமிழனும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார். பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கைது என்பது ஒவ்வொரு தமிழனும் தலைகுனிந்து நிற்கும் அளவிற்கு செய்துள்ளனர். குறிப்பாக துணைவேந்தரை கைது செய்து நான்கு மணி நேரம் காவல்துறை வாகனம் மூலமாக சேலம் முழுவதும் சுற்றியுள்ளனர். மாலை 4:40க்கு கைது செய்துவிட்டு, இரவு 9:30 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். நள்ளிரவு மேஜிஸ்திரேட் இல்லத்திற்கு துணைவேந்தர் அழைத்துச் செல்லப்பட்டு. 3.30 மணிக்கு மேஜிஸ்திரேட் ஜாமின் வழங்கினார்.

கரூரில் வீட்டு வேலைக்காக அழைத்து சிறுமியை கற்பழித்த முதியவர்; மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டால், அதில் வரும் லாபம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். இதை வேண்டுமென்றே திரித்து தனியார் நிறுவனம் என்று கூறிவிட்டார்கள். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட நான்கு  பேராசிரியர்கள் சேர்ந்து தனியார் நிறுவனத்திடம் இருந்து வரும் பணத்தை பவுண்டேஷன் மூலமாக பெரியார் பல்கலைகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் திறமையை வளர்க்கும் விதமாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது? 

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் உள்ளது. இதேபோன்று பணம் நாடு முழுவதும் இருந்து வருகிறது. அதை பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை, நியாயமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இதிலிருந்து லாபத்தை ஒரு சதவீதம் கூட வெளியே எடுக்க முடியாது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் காவல்துறையினர் தனியார் நிறுவனம் ஆரம்பித்துவிட்டதாக பெரியார் பல்கலைக்கழக நிறுவனத்தின் சொத்தை கொள்ளையடிப்பதாக பொய்யான குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதற்கு காவல்துறை முகத்தை கீழே குனிய வேண்டும்.

குறிப்பாக இரண்டு நபர்கள் துணைவேந்தர் ஜெகநாதனை நேரில் சந்திக்க செல்கிறார்கள். 10 வினாடிகள் கூட இருக்காது, அதற்குள் எவ்வாறு ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டிருக்க முடியும்? மேலும் அவரிடம் பேசிவிட்டு செல்லும்போது இருவரும் சிரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியவர்கள் கேட்டுக் கொண்டு எவ்வாறு அவரால் சிரிக்க முடியும்? எனவே முகாந்திரமே இல்லாமல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்

இது அமைச்சர் பொன்முடி சொல்லிக்கொடுத்து நடக்கிறது. பெரியார் பல்கலைக்கழகம் பதிவாளர் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொன்முடி துணைவேந்தரிடம், இவரை தான் பதிவாளராக போட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அதை துணைவேந்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நடவடிக்கை மேற்கொண்டு நியாயமான முறையில் பதிவாளரை போட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான கூட்டம் நடைபெற்றபோது  பிரச்சினை ஏற்பட்டது. துணைவேந்தரிடம் பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் உடன் இரண்டு பேர் பேசும் வீடியோ ஆதாரங்களை அண்ணாமலை வெளியிட்டார்.

அரசு சொன்ன பதிவாளரை போடவில்லை என்ற காரணத்தால் தனிமனிதன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குபதிவு செய்து நாயே நடத்துவது போன்று நடத்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டில் அமர்ந்து உள்ளார்.

பொன்முடி சொன்னால் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம் என்று சொன்னால், எதற்காக காவல்துறை காக்கிசட்டை போடுகிறது? பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள நிறுவனத்தை பேராசிரியர்கள் நான்குபேர்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவி முடிந்தபிறகு அது என்னுடைய நிறுவனம் என்று கூறி எடுத்துச்சென்றால் அது குற்றம், அப்பொழுது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் சரியானது. குறிப்பாக துணைவேந்தர் விவகாரத்தில் சேலம் மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு அனைத்தும் செயல்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் சென்னை நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கையில் பணத்தை கொடுப்பதே முறைகேடு செய்வதற்காகத்தான். அதனால் தான் ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அடுத்து ஒரு மாதத்தில் ஆயிரம் ரூபாய், பொங்கல் தொகுப்பு என்று கொண்டு வருவார்கள். பொங்கல் தொகுப்பிற்கு நாடகம் நடத்தி பொதுமக்களிடம் பணத்தைக் கொடுப்பார்கள். ஒரு பட்டனை அழுத்தினால் உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். ஆனால் இவர்கள் வங்கி கணக்கில் தரமாட்டார்கள். 

பொங்கல் தொகுப்பில் பணம் வருவது உறுதி எதிர்க்கட்சியாக ஸ்டாலின் இருந்தபோது 5000 கொடுக்க வேண்டும் என்று கூறினார். திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்கள், திருச்சி மாநகரத்தை சுத்தம் செய்வதாக கேள்விப்பட்டேன், எவ்வளவு டன் குப்பை எடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு ஏழு டன் குப்பை எடுத்ததாக கூறியதாக தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios