சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி   அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதி சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோகுல் (30). அதே பகுதியைச் சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6) ரிஷ்மிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

சேலம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு பிஞ்சு இளம் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதி சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோகுல் (30). அதே பகுதியைச் சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6) ரிஷ்மிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மகள் துடிதுடிக்க கொலை! நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி? பகீர் தகவல்!

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் கடந்த 15 நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த சுகமதி தான் பெற்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: கருக்கா வினோத்தால் என்ஐஏவிடம் வசமாக சிக்கிய சென்னை பாலியல் கும்பல்.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.