2 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும் 60 கி.மீ. ஓடும் ஸ்கூட்டரை தயாரித்து சேலம் மாணவர் அசத்தல்
சேலத்தில் நின்றபடி இயக்கும் மின்சார ஸ்கூட்டரை தயாரித்து பொறியியல் கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே எழுமாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் யோகபிரதீப் காக்காபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், தனது முயற்சியால் மின்சார ஸ்கூட்டரை புதுமையாக தயாரித்துள்ளார்.
சார்ஜர், பேட்டரியுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அந்த ஸ்கூட்டரை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 55 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் ஓட்டி செல்லலாம் என்றும், மற்ற ஸ்கூட்டர் மாதிரி இல்லாமல் நின்ற படியும், அமர்ந்து கொண்டும் ஓட்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.30 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் யோகபிரதீப் தெரிவித்தார்.
நெல்லையில் மினி பேருந்து ஏறியதில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு
மேலும் அவர் கூறும்போது, எனது சொந்த தயாரிப்பில் கண்டுபிடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில்தான் தினமும் கல்லூரிக்கு சென்று வருகிறேன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் வர்த்தக ரீதியாக தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கு அரசு உதவி புரிய முன்வர வேண்டும் என்றார்.
கோவையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி