சேலத்தில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் வரதட்சணை கொடுமை; இளம்பெண் தர்ணா

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டில் வரதட்சணை கொடுமை நடப்பதாகக் கூறி இளம் பெண் கடை உரிமையாளரின் வீட்டு வாசலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

daughter in law of famous textile shop tycoon staged protest for dowry issues in salem district

 சேலம், நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல தனியார் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ரவிச்சந்திரன் என்பவரின் மகன் கார்த்திக் பாலாஜி உள்ளார். இந்த நிலையில் கார்த்திக் பாலாஜி என்பவருக்கும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தொழிலதிபர் மகள் சுபராகாவிற்கும் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சுபராகாவின் கணவர் மற்றும் அவரது மாமியார் அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் ஐந்து கோடி ரூபாய் பணம் வாங்கி வர வேண்டும் என்று தொல்லைகள் செய்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கார்த்திக் பாலாஜியின் மனைவி சுபராக தனது சொந்த ஊரான திருச்சூருக்கு சென்றுள்ளார். மேலும் கார்த்திக் பாலாஜி தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

சென்னையில் இளம் பெண்ணை கட்டாய படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 2 பேர் கைது

இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சுபராகா கேரளா நீதிமன்றத்தில் தனது கணவர் விவாகரத்து செய்ததாக தெரிந்து வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கு விசாரணை முடியும் வரை தனது கணவர் வீட்டில் தான் இருக்க உத்தரவு இட வேண்டும் என்று மனு செய்திருந்தார். இதை நீதிமன்றம் விசாரித்து வழக்கு விசாரணை முடியும் வரை கணவர் இல்லத்தில் இருந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களாக சுபராகாவும், அவரது பெற்றோரும் சேலம் வந்திருந்து கார்த்திக் பாலாஜி வீட்டுக்கு செல்ல முயன்றனர். 

மேதாதுவில் அணையா? கர்நாடகா துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

இதனை தடுத்துள்ளார் கணவர் கேரள நீதிமன்றம் உத்தரவு நகலை காண்பித்து வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்  மீண்டும் திருச்சூர் சென்ற சுபராகா இன்று காலை சேலம் வந்தார். பின்னர் அவரது கணவர் கார்த்திக் பாலாஜி இல்லம் முன்பு அமர்ந்து வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளனர். அவர்கள் வரும் வரை தொடர்ந்து வாசலிலேயே அமர்ந்து காத்திருப்பேன் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை அறிந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளம் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலை வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios