மேதாதுவில் அணையா? கர்நாடகா துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவோம் என்ற கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

minister duraimurugan condumn to karnataka deputy cm sivakumar for meketadu issue

கர்நாடகா மாநில துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்றைய தினம் கர்நாடகா மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். ஆலோசனைக்குப் பின்னர் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. அது எங்கள் உரிமை என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு சிவக்குமார் அவர்கள் தெரிவித்ததாக இன்று காலை பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற திரு சிவக்குமார் அவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால் கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேட்டூர் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி; நிவாரணத் தொகை வழங்க முதல்வர் உத்தரவு

திரு சிவக்குமார் அவர்கள் பதவிப்பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படதாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுபாடற்ற நீர்பிடிப்பு பகுதியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.

காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

கர்நாடகா அரசு மேதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி வரிவாக பேசலாம் என்று கருதுகிறேன். மாண்புமிகு சிவக்குமார் அவர்கள் அதுவரை பொறுமை காப்பார் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios