போதை ஊசி போட்டு உயிரிழந்தாரா? புதைக்கப்பட்ட மாணவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை!!

சேலத்தில் உயிரிழந்த மாணவன் போதை ஊசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து மாணவனின் உடன் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

body of the buried student was exhumed and post mortem was conducted to find out whether the death was due to drug injection

சேலத்தில் உயிரிழந்த மாணவன் போதை ஊசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து மாணவனின் உடன் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி புதுத்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு செல்வி என்ற மனைவியும் கிரி என்ற மகனும் உள்ளனர். மகன் கிரி 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி இரவு கிரி திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இவங்களே வைப்பாங்க, இவங்களே எடுப்பாங்க..முதல்வன் ரகுவரன் ஸ்டைலில் பேசி அசத்திய அன்புமணி ராமதாஸ்

இந்த நிலையில் மாணவன் உடலை மணினுர் சிவசக்திநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதனிடையே போதை ஊசி போட்டுக் கொண்டதால் மாணவன் உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவனின் பெற்றோர் மஞ்சள் காமாலை நோயால் கிரி இறந்ததாக தெரிவித்தனர். ஆனால் மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை மாணிக்கம் புகார் தெரிவித்தார். அதம் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பல் புடுங்கிய சர்ச்சை: நாளை தொடங்கும் விசாரணை.. புகார் கொடுக்க வாங்க - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இதுக்குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் போதை ஊசி போட்டு இறந்தாரா அல்லது நோயினால் இறந்தாரா என்பது குறித்து தெரியவரும். மாணவனுக்கு எப்படி போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூடுதல் தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios