இவங்களே வைப்பாங்க, இவங்களே எடுப்பாங்க..முதல்வன் ரகுவரன் ஸ்டைலில் பேசி அசத்திய அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது மட்டும் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று திருவண்ணாமலையில் அண்ணா சிலை முன்பு போராட்டம் நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அன்புமணி ராமதாஸ்.
அப்போது, “டெல்டா நிலத்தை மத்திய அரசு ஏலம் விட்டு இருக்கின்றனர். மாநில அரசுக்கு தெரியாமல் இதை மத்திய அரசு செய்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தை மூடச்சொல்லி தொடர்ந்து போராட்டம் செய்து வருகிறேன். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய நிலக்கரி அமைச்சரிடம் ஒரு மனுக்கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டார்.ஏலப்பட்டியலிருந்து 3 சுரங்கத்தை ஏலத்தில் இருந்து எடுத்துட்டோம் என ஒன்றிய அமைச்சர் டூவிட் போடுகிறார்.
இவங்களே நிலத்தை எடுப்போம் என்று அறிவித்துவிட்டு, இவர்களே எடுக்க சொல்லி மனு கொடுக்கின்றனர், நீக்குவதாக இவர்களே சொல்கின்றனர். இவர்களே வெற்றி வெற்றி என்று சொல்கின்றனர். டெல்டா பகுதி நிலங்கள் பறிபோனால் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என வல்லுநர்கள் சொல்கின்றனர். புதிய 3 நிலக்கரி சுரங்களுக்கு அனுமதி கொடுக்கமாட்டோம் என தமிழக அரசு சட்டசபையில் அறிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க..AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?
3 முறை பட்டியல் ஏலம் எடுக்காததால் தான் பட்டியலில் இருந்து ஒன்றிய அமைச்சர் எடுத்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரம் இல்லாமல் பேசுவதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் நினைக்கும் கொள்கைகளை இங்கே பேசக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக ஆளுநர் குற்றச்சாட்டு வைப்பது ஆதாரம் அற்றது.
ஆதாரமில்லாமல் ஒரு ஆளுநர் பேசுவது சரியல்ல. அவர் அரசியல் அற்றவர். நடுநிலையாக இருக்க வேண்டும் அவர் நினைக்கும் கொள்கை எல்லாம் இங்கு பேசக்கூடாது. ஆன்லைன் சூதாட்ட சட்டம் மசோதா இரண்டாவது முறையாக சட்டசபை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை ஆளுநர் கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். இதை கையெழுத்து போடாமல் வைத்துவிட்டு தேவையில்லாத எல்லாம் பேசி வருகிறார்” என்று பேசினார் அன்புமணி ராமதாஸ்.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!