AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?
திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலா உட்பட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு, எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். இது குறித்த அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தரப்பில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை (ஏப்ரல் 10) நீதிபதி பிரதீப் எம். சிங் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவின் ஓபிஎஸ் அணி ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த உள்ளது.
இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!
இந்த விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும். எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக ஆரம்பித்த 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுகவின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். சசிகலா உட்பட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும். யார் யாருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்றும் கூறினார்.
இதையும் படிங்க..முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய பாஜக..காங்கிரஸ் அப்செட்! யாரு தெரியுமா? ராஜாஜி கொள்ளுப்பேரன் தான் அது !!