சேலத்தில் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர்கள் சோகம்
சேலம் மாவட்டம் கன்னகுறிச்சி பகுதியில் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கன்னகுறிச்சி பகுதியில் உள்ள புது ஏரியில் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பிரசாத் மற்றும் பாலாஜி ஆகியோர் திடீரென சேற்றில் சிக்கி தவித்துள்ளனர். இதை கண்ட உடன் சென்ற மாணவர் அளித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியோடு சேற்றில் சிக்கி நீரில் மூழ்கிய மாணவர்களை சடலமாக மீட்டனர். தொடர்ந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; இளம்பெண் பலி
கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி அருகே 4 கல்லூரி மாணவர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மறைவதற்கு முன்பதாகவே பள்ளி மாணவர்கள் 2 ஏரியில் மூழ்கி உயிரிழந்தது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ஏற்கனவே, கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழ்நிலையில் ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்வது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.