நீங்க என்னடா எங்க முன்னாடியே உக்காந்து சாப்பிடுறீங்க? புதுக்கோட்டை கோவிலில் நிகழ்ந்த சாதிய வன்கொடுமை
புதுக்கோட்டையில் கோவில் பூஜையில் கலந்து கொண்டு அனைவருடனும் அமர்ந்து உணவு சாப்பிட்டி பட்டியல் இன இளைஞர்களை சாதி பெயரை குறிப்பிட்டு மாற்று சமூக இளைஞர்கள் அத்து மீறியதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதுநகரைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் வேண்டுதலை நிறைவேற்ற கிடா வெட்டி பூஜை நடத்தியுள்ளனர். இந்த கிடா வெட்டு பூஜைக்கு அந்த சமூகத்தினர் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து இருந்த நிலையில் மட்டங்கால் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் உணவு உண்பதற்காக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த இரண்டு மாற்று சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்கள் தங்களுக்கு முன்னதாகவே பட்டியலின இளைஞர்கள் உணவு உண்ண அமர்ந்து விட்டதாக தெரிவித்து பட்டியலின இளைஞர்களை அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் பெயரை சொல்லி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பட்டியலின இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கறம்பக்குடி பட்டுக்கோட்டை சாலையில் கிடா வெட்டு பூஜையில் வழங்கப்பட்ட உணவோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
விளையாட்டு துறையின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற பல்வேறு முயற்சிகள் - அமைச்சர் உதயநிதி
மேலும் இந்த மறியல் போராட்டம் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது புகாரை எழுத்துப்பூர்வமாக காவல் நிலையத்தில் வழங்குங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் செய்யலாம் என்று தெரிவித்து மக்களை சமாதப்படுத்தினர்.
ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா; திருப்பூரில் குடுகுடுப்பை வாசித்து பிரசாரத்தை தொடங்கிய திமுக
இதுகுறித்து காவல்துறையிடம் கேட்டபோது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிலர் கிடா வெட்டு பூஜையில் உணவு உண்டாலும் அதில் சிலர் மது அருந்தியதாகவும் அதேபோல் இரண்டு மாற்று சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களும் மது அருந்தும் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாய் தகராறால் தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தினாலே பிரச்சினை எதற்காக நடந்தது என்பது தெரியவரும் என்றனர். மேலும் மட்டங்கால் பகுதியில் வேறு ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.