விளையாட்டு துறையின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற பல்வேறு முயற்சிகள் - அமைச்சர் உதயநிதி

தமிழகத்தை விளையாட்டு துறையினர் தலைநகராக மாற்றும் எண்ணத்தில் தான் திராவிட மாடல் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Minister Udayanidhi has said that the government is working to make Tamil Nadu the capital of the sports sector vel

திருச்சி கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு துறை வல்லுநர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. வரும் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த வீரர்கள், சிறந்த பயிற்றுனர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை, எளிதில் வெற்றி பெருவதற்கான நுணுக்கங்களை பகிர உள்ளனர்.

இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கை துவக்கி வைத்தார். கருத்தரங்கில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தேசிய கல்லூரியின் முதல்வர் குமார் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா; திருப்பூரில் குடுகுடுப்பை வாசித்து பிரசாரத்தை தொடங்கிய திமுக

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு சென்று கேலோ இந்தியா, ஒலிம்பிக் மற்றும் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்ற வீரர்களுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கெள்ரவித்தார்.

இந்த கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், விளையாட்டு துறை சார்பாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்து கொளவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக விளையாட்டு துறைதுறை நடத்திய அறிவியல் மாநாட்டில் உலகெங்கும் உள்ள பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தை விளையாட்டு துறையின் தலை நகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக தான் திராவிட மாடல் அரசு பல்வேறு சிறப்பு விஷயங்களை, முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

Annamalai: விவசாயிகளின் கால்களை கழுவி பாத பூஜை செய்த பாஜக தலைவர் அண்ணாமலை

கேலோ இந்தியாவில் இந்த ஆண்டு நம் தமிழகம் 2 வது இடம் பிடித்துள்ளது. தமிழகம் 2ம் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை. மணிப்பூர் கலவரத்தின் போது அங்குள்ள விளையாட்டு வீரர்களை நம் தமிழகத்திற்கு அழைத்து வந்து அவர்கள் பயிற்சி பெற நம் தமிழக அரசு உதவியது. இதன் காரணமாக கேலோ இந்தியாவில் அவர்கள் சிறப்பாக விளையாடி பல பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கிராம புறங்களில் உள்ள எண்ணற்ற வீரர்கள் பலன் அடைந்துள்ளனர் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios