பிரதமர் மோடி தெப்பக்காடு யானைகள் முகாமிற்குச் சென்று ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படம் மூலம் பிரபலமடைந்த பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்துப் பேசுகிறார்.

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்கர் விருது வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் நட்சத்திரங்களாக பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்துப் பேசுகிறார்.

நேற்று (சனிக்கிழமை) சென்னை வந்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெவ்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இரவு விமானத்தில் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்ற பிரதமர் மோடி இன்று காலை காலை 7 மணிக்கு பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் செல்கிறார்.

இன்று முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி! பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் சந்திப்பு

பந்திப்பூர் வனப்பகுதியில் வாகன சவாரி செய்யும் அவர் சர்வதேச வனவிலங்குகள் சிறப்பு சரணாலயத்தையும் திறந்து வைக்கிறார். சர்வதேச வனவிலங்குகள் கூட்டமைப்பு என்ற இந்த சரணாலயத்தில் புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பபியுமா, ஜாகுவார் மற்றும் சீட்டா ஆகிய ஏழு வனவிலங்குகள் பாதுகாக்கப்படும்.

Scroll to load tweet…

பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறார். காலை 9.35 மணி அளவில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்குச் சென்று ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படம் மூலம் பிரபலமடைந்த பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்துப் பேசுகிறார்.

சென்னையில் மாற்றுத் திறனாளி தொண்டருடன் செல்ஃபி எடுத்து பாராட்டிய பிரதமர் மோடி!

அங்கிருந்து முதுமலை தேசிய புலிகள் காப்பகத்திற்குச் சென்று அங்கு சிறப்பாகப் பணியாற்றிய கள இயக்குநர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டுகிறார். புலிகளைப் பிடிப்பதில் திறமையாகச் செயல்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களையும் சந்தித்து பாராட்டு தெரிவிக்கிறார். அப்போது முதுமலை காப்பகத்தில் உள்ள மூன்று மூத்த யானை பாகர்களைச் சந்திக்கிறார். அங்கிருக்கும் யானைகளுக்கும் உணவளிக்க இருக்கிறார்.

Scroll to load tweet…

பிறகு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து புறப்பட்டு காரில் மசனகுடிக்கு சென்று, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கர்நாடகாவின் மைசூரு நகருக்குச் செல்கிறார். இன்று பிரதமரின் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Asianet Tamil News live : முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி