Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் மாற்றுத் திறனாளி தொண்டருடன் செல்ஃபி எடுத்து பாராட்டிய பிரதமர் மோடி!

சென்னையில் மாற்றுத் திறனாளியான பாஜக தொண்டருடன் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டு அந்தப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

PM Modi takes selfie with a proud BJP Karyakarta in Tamil Nadu
Author
First Published Apr 9, 2023, 7:46 AM IST | Last Updated Apr 9, 2023, 9:27 AM IST

பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் மாற்றுத் திறனாளி பாஜக தொண்டருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அவரைச் சந்தித்து பற்றி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பின்னர் ஈரோட்டைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவரைச் சந்தித்துப் பேசினார். மாற்றுத் திறனாளியான மணிகண்டன் என்ற அந்தத் தொண்டருடன்  உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அப்போது எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "ஒரு சிறப்பு செல்ஃபி... சென்னையில் திரு எஸ். மணிகண்டனைச் சந்தித்தேன். அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க பாஜகக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் - அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்" என்று  தெரிவித்துள்ளார்.

பந்திபூரில் சர்வதேச வனவிலங்குகள் சிறப்பு சரணாலயத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

மேலும், "திரு.எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தைத் திறந்து வைத்தார். சென்னை - கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவிலும் பிரதமர் கலந்துகொண்டு பேசினார்.

இன்று முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி! பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் சந்திப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios