Heavy Rain School Holiday : கொட்டித்தீர்க்கும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
என வானிலை மையம் கூறியிருந்தது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியிருந்தது.
இதையும் படிங்க: School College Holiday:ஜூலை 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு!
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்த 6 மாவட்டங்களில் போட்டு தாக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஆட்சியர் அருணா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.