MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • School College Holiday:ஜூலை 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு!

School College Holiday:ஜூலை 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! என்ன காரணம் தெரியுமா? வெளியான அறிவிப்பு!

திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jun 27 2024, 06:56 AM IST| Updated : Jun 27 2024, 07:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thiruthani Murugan Temple

Thiruthani Murugan Temple

முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்வது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 

24
School Holiday

School Holiday

இந்நிலையில் ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஆடி கிருத்திகையும் ஒன்று.  இந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. அன்றை தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Weekend Special Buses: வீக் எண்டுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா! கவலை வேண்டாம்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!

34
Thiruvallur Collector

Thiruvallur Collector

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்  பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருள்ளூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

44
School Working Day

School Working Day

இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved