Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் ஊழியரிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்.. கொத்தாக தூக்கிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 5  பேரை சிறுமுகை போலீசார் கைது செய்துள்ளனர்.

neelagiri sirumugai police have arrested 5 people in extort money from a Tasmac employee
Author
First Published Nov 5, 2022, 11:05 PM IST

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் 46 இவர் சிறுமுகையிலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள 1811 டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 31 ஆம் தேதி விஜய் ஆனந்த் டாஸ்மாக்கில் கலெக்சனான ரூபாய் 10 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்த மேட்டுப்பாளையத்துக்கு  சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், விஜய் ஆனந்தை மரித்து அரிவாளை  காட்டி மிரட்டி பணத்தைப் பறிக்க முயற்சித்தனர்.

neelagiri sirumugai police have arrested 5 people in extort money from a Tasmac employee

இதையும் படிங்க..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !

இதனால் பயந்து போன விஜய் ஆனந்த் சத்தமிட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் ஆட்கள் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது இது குறித்து விஜய் ஆனந்த் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தை அங்கிருந்து சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் செல்வநாயகம், அன்னூர் காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன்,  சிறுமுகை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க..பாஜகவுக்கு தாவும் எடப்பாடி அணி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல் பின்னணி.! பற்ற வைத்த ஓபிஎஸ் டீம் !!

neelagiri sirumugai police have arrested 5 people in extort money from a Tasmac employee

தனிப்படையினர் விஜய் ஆனந்த இடம் பணம் பறிக்க முயன்றவர்கள் யார் என்பதைக் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலீசார் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆகாஷ் கண்ணன் 22, திருபுவனம்  கீழடி காமராஜர் புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் முத்துப்பாண்டி 21, திருபுவனம் பகுதியை சேர்ந்த அந்தோணி மகன் ரவிக்குமார் 22, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் லோகநாதன் 27 சதீஷ் (20) ஆகிய 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேற்கண்ட டாஸ்மாக் கடையில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு வேலை பார்த்த ஒரு நபர் கொடுத்த தகவலின் பெயரில் பணம் பறிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !

Follow Us:
Download App:
  • android
  • ios