நீலகிரியில் நகையை லாவகமாக திருடிவிட்டு பங்குபோடும்போது மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்

நீலகிரியில் பூட்டியிருந்த வீட்டில் திறமையாக சென்று திருடி வந்த நபர்கள் நகைகளை பங்குப்போடும் போது காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 persons arrested by police officers in theft case in nilgiris

நீலகிரி மாவட்டம் உதகை பழைய லிபர்ட்டி திரையரங்கம் செல்லும் சாலையில் இரண்டு நபர்கள் அமர்ந்து நகைகளை பங்கு பிரித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற நகர மன்ற உறுப்பினர் ஜார்ஜ் மற்றும் அவரது வாகன ஓட்டுநர் மஞ்சு ஆகியோர் சந்தேகமடைந்து அந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர்.

2 persons arrested by police officers in theft case in nilgiris

விசாரணையில் அந்த நகைகள் திருடிய நகைகள் என்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர் இதனைத் தொடர்ந்து உடனடியாக உதகை மத்திய நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதகை மத்திய நகர காவல் துணை ஆய்வாளர்கள் கனகராஜ், சுசீந்திரன், சிறப்பு துணை ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் நகைகளை பங்கு போட்டுக் கொண்டிருந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அஷ்வின் போட்ட பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த விசாரணையில் நகைகளை திருடிய குற்றவாளிகள் கண்ணன், மோகன் என தெரிய வந்தது. மேலும் இந்த விசாரணையின் போது நகைகளை நேற்று இரவு உதகை மிஷினரிஹில் பகுதியில் உள்ள பூட்டி இருந்த ஒரு வீட்டில் திருடப்பட்ட நகைகள் என தெரியவந்தது. நகைகளை மீட்ட காவல்துறையினர் நகைகளை திருடிய கண்ணன், மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

34 ஆண்டுகளுக்கு பின் பின் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios