Asianet News TamilAsianet News Tamil

வேலூரில் கனமழை: தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழையை முன்னிட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Heavy rains in Vellore: Primary school students today gets Holiday today sgb
Author
First Published Sep 21, 2023, 7:51 AM IST

வேலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகள் வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட் ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்து உள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்திருக்கிறது.

அதன்படி, இன்று காலை முதல் வேலூரில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரசியல் சாசன முகவுரையில் 'மதச்சார்பற்ற', 'சோசலிஸ்ட்' என்ற வார்த்தைகள் நீக்கம்!

Heavy rains in Vellore: Primary school students today gets Holiday today sgb

இதுபற்றி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், கனமழை பெய்துவருவதால் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதே சமயத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழக்கம்போல வகுப்புகள் நடைபெறும். கல்லூரிகளும் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்யும் என் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருக்கிறது.

விஸ்வகர்மா திட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் கடன்! யாருக்குக் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

Follow Us:
Download App:
  • android
  • ios