Asianet News TamilAsianet News Tamil

அரசியல் சாசன முகவுரையில் 'மதச்சார்பற்ற', 'சோசலிஸ்ட்' என்ற வார்த்தைகள் நீக்கம்!

அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்குக்கூட அக்கட்சிகள் சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை பின்பற்றுவது கட்டாயமாகும்.

Socialist secular omitted from Constitution Preamble: Adhir Ranjan Chowdhury sgb
Author
First Published Sep 20, 2023, 5:07 PM IST

செவ்வாய்கிழமையன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின் நகல்களில் முகவுரையில் இடம்பெறும் 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

"எங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பின் புதிய நகல்களை கைகளில் பிடித்துக்கொண்டு நாங்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தோம். அதன் முகவுரையில் 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளைக் காணவில்லை" என்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்துக்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு மிரட்டல்

'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் 1976இல் சேர்க்கப்பட்டது: "இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அமைப்பதில் உறுதியாக இருக்கத் தீர்மானித்துள்ளோம்..." என்ற வாசகம் இடம்பெற்றது.

Socialist secular omitted from Constitution Preamble: Adhir Ranjan Chowdhury sgb

அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு அந்தக் கட்சிகள் சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை பின்பற்றுவது கட்டாயமான நிபந்தனைகளில் ஒன்றாகும். இது 1989 இல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 29-A (5) இல் சேர்க்கப்பட்டது.

ஜனவரி 2015இல், அப்போதைய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முன்னுரையில் 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோசலிஸ்ட்' என்ற வார்த்தைகள் இருக்க வேண்டுமா என்று விவாதிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்றார். அதே ஆண்டில், செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட குடியரசு தினத்திற்கான அரசாங்க விளம்பரத்தில், "சோசலிஸ்ட், மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகளைத் தவிர்த்து, அரசியலமைப்பின் முகவுரை இடம்பெற்றிருந்தது. அப்போதும் அது குறித்து விமர்சனங்கள் வந்தன.

இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு சமூக சேவகர் 2020இல் உச்ச நீதிமன்றத்தில் "மதச்சார்பற்ற" மற்றும் "சோசலிஸ்ட்" என்ற வார்த்தைகளை முகவுரையில் இருந்து நீக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

விஸ்வகர்மா திட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் கடன்! யாருக்குக் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

Follow Us:
Download App:
  • android
  • ios