நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது உறவினரின் மகள் மகர ஜோதி. இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இருவரது குடும்பமும் ஒரே பகுதியில் இருக்கிறது. தினமும் மகரஜோதியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வீரமணி பள்ளியில் விடுவார் என்று தெரிகிறது.

இன்று காலையிலும் வழக்கம் போல வீரமணியுடன் மகரஜோதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். வீரமணியின் இருசக்கர வாகனம் சென்ற அதே சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அந்த நேரத்தில் சாலையை வீரமணி கடக்க முயன்றுள்ளார். எதிர்பாராத விதமாக அரசு பேருந்து வீரமணியின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். பலத்தகாயமடைந்த மகரஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் வீரமணி உயிர் தப்பினார். 

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த போலீசார் மகரஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!