திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கிறது குண்டுப்பட்டி கிராமம். இங்கிருக்கும் ஒரு தோட்டத்தில் நேற்று நள்ளிரவில் மதுபான விருந்து நடப்பதாகவும் அதற்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிதீஷ்குமார், தருண் ஆகிய இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளமான முகநூலில் பதிவிட்டுள்ளனர். இதே போன்றதொரு விருந்து கடந்த ஆண்டும் நடந்திருந்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

அதைப்பார்த்து 6 இளம்பெண்கள் உட்பட 276 பேர் கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட தோட்டத்தில் நேற்றிரவு திரண்டனர். அவர்கள் அனைவரும் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று நள்ளிரவு 2 மணி முதல் கஞ்சா,மது என அனைத்து வகையான போதைகளையும் அருந்தி 276 பேரும் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து சம்பவம் நடந்த தோட்டத்திற்கு சென்ற காவலர்கள் அங்கிருந்த அனைவரையும் சுற்றி வளைத்தனர்.

276 பேரிடமும் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாகவும் விசாரணை நடைபெற்று வந்தது. பின் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் எச்சரித்து விடுவித்தனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிதீஷ்குமார், தருண் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதியின்றி தோட்டத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளர் கற்பகமணியையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கேளிக்கை நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து கஞ்சா, மது, போதை ஸ்டாம்புகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி..! சரக்கு விலை தாறுமாறு உயர்வு..! இன்று அமலாகிறது..!