Asianet News TamilAsianet News Tamil

குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி..! சரக்கு விலை தாறுமாறு உயர்வு..! இன்று அமலாகிறது..!

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று முதல் அதிரடியாக உயர்த்தப்படுகிறது. அதன்படி தற்போது விற்பனையாகும் விலையை விட கூடுதலாக குவாட்டர் ரூ.10, ஆஃப் ரூ.20, ஃபுல் ரூ.40, பீர் ரூ.10 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

rates of liquors in tasmac shop increased
Author
Tamil Nadu, First Published Feb 7, 2020, 10:45 AM IST

தமிழக அரசு சார்பாக நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதிலும் 5300 இருக்கிறது. இவை அனைத்தும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. தினமும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் வார இறுதி தினங்களிலும் டாஸ்மாக் வருமானம் தாறுமாறாக அதிகரிக்கும்.

rates of liquors in tasmac shop increased

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று முதல் அதிரடியாக உயர்த்தப்படுகிறது. அதன்படி தற்போது விற்பனையாகும் விலையை விட கூடுதலாக குவாட்டர் ரூ.10, ஆஃப் ரூ.20, ஃபுல் ரூ.40, பீர் ரூ.10 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை இன்று மதியம் கடை திறக்கப்பட்டது முதல் அமலுக்கு வருகிறது. கடைசியாக கடந்த 2017 ஆண்டு மதுபான விலை உயர்த்தப்பட்டது.

rates of liquors in tasmac shop increased

கடந்த ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. தற்போதைய விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்க இருக்கிறது. இதனிடையே மதுபான விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக தகவல் பரவியதும் நேற்று இரவு டாஸ்மாக் கடைகளை குடிமகன்கள் கூட்டம் தாறுமாறாக அலைமோதியது. விலை உயர்வு குறித்து அதிர்ச்சியில் இருக்கும் குடிமகன்கள், அரசு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios