Crime: கோவில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் மோதல்; கொலையில் முடிந்த முன்விரோதம்
நாகை மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட மோதலில் 2 மாதங்களுக்கு பின்னர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்த மோகன்ராம் மற்றும் விக்கி (வயது 20 ), இவரது நண்பர்கள் ப்ரித்தீவிராஜ் ( 21 ), காக்கா (எ)டேவிட் (18 ) ஆகியோருக்கு இடையே திருவிழாவின்போது நடனம் ஆடுவதில் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெருமாள் வடக்கு 2வது சந்தில் திருவிழா முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் வெளிநாட்டில் இருந்த வந்த தனது நண்பர் உதயக்குமார் வீட்டில் மோகன்ராம் திருவிழாவில் நடந்த சண்டை தொடர்பான வீடியோவை காட்டி பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த மோகன்ராம் மீது கோபமடைந்த விக்கி, இவரது நண்பர்கள் ப்ரித்தீவிராஜ், காக்கா (எ)டேவிட் உள்ளிட்ட 5 பேர் உதயக்குமார் வீட்டு வாசலில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து தகராறு கைகலப்பாக மாறவே, உதயக்குமாரின் தந்தை பக்கிரிசாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் பக்கிரிசாமியை தள்ளிவிட்டதில் கீழே விழுந்து பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் பக்கிரிசாமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உங்களின் ஆபாச வீடியோ எங்கள் கையில்; தருமபுரம் ஆதீனத்திற்கு ஆட்டம் காட்டிய உதவியாளர் கைது
பின்னர் பிருதிவிராஜ், விக்கி இருவரை பிடித்து விசாரணை செய்துவரும் போலீசார் தப்பி ஓடிய மற்றவர்களை தேடி வருகின்றனர். நாகையில் கோவில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.