Asianet News TamilAsianet News Tamil

உங்களின் ஆபாச வீடியோ எங்கள் கையில்; தருமபுரம் ஆதீனத்திற்கு ஆட்டம் காட்டிய உதவியாளர் கைது

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி அவருக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் உதவியாளரை காவல் துறையினர் வாரணாசியில் கைது செய்தனர்.

Ex assistant Senthil arrested for demanding money from Dharmapuram Adheenam vel
Author
First Published Jun 11, 2024, 11:40 AM IST

மயிலாடுதுறையை மாவட்டம் தருமபுரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதீனம் இருக்கின்றது. இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இருந்து வருகிறார். இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரரும், தர்மபுரி ஆதீனத்திற்கு சொந்தமான தேவஸ்தானத்தின் கணக்காளருமான விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீசாரிடம் ஒரு திடுக்கிடும் புகாரை அளித்தார். அதில் தங்களது மடாதிபதி தொடர்பான ஆபாச வீடியோ ஒன்றும், அது தொடர்பான ஆடியோ ஒன்றும் தங்கள் வசம் இருப்பதாகவும். 

Breaking: புதுவையில் கழிவறை வழியாக பரவிய விஷ வாயு; ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் பலி - இருவர் கவலைக்கிடம்

அதை பொதுவெளியிலும், பத்திரிகையிலும் வெளியிடாமல் இருக்க பெரும் தொகை தர வேண்டும் என்று சிலர் மிரட்டுவதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த மயிலாடுதுறை போலீசார். முதற்கட்டமாக தஞ்சை மாவட்ட வடக்கு பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத் மற்றும் சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். 

இதனிடையே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களில் முக்கிய நபரான  தருமபுரம் ஆதீன கர்த்தரின் முன்னாள் நேரடி உதவியாளர் செந்தில் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது செந்திலுக்கு ஜாமீன் வழங்க முடியாது. இந்த வழக்கில் அவர் நிச்சயம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

உடல் முழுவதும் அடுக்கடுக்கான நோய்கள்; கைவிரித்த தனியார் மருத்துவமனை - சாதித்து காட்டிய அரசு மருத்துவர்கள்

இதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் தலைமறைவாக இருந்த செந்திலை தனிப்படை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் அவர் மயிலாடுதுறை அழைத்து வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios