உடல் முழுவதும் அடுக்கடுக்கான நோய்கள்; கைவிரித்த தனியார் மருத்துவமனை - சாதித்து காட்டிய அரசு மருத்துவர்கள்
சிக்கலான இருதய ரத்தக்குழாய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் மல்லப்புரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 63). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முதியவரின் மகன் அன்பரசன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேகரை சேர்த்த போது, அவருக்கு இருதய பாதிப்புடன், இரத்தக்குழாயில் ஓட்டை மற்றும் இரத்தக்குழாய் தமனி வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சேகருக்கு அறுவை சிகிச்சை செய்ய 20 இலட்ச ரூபாய் செலவாகும் எனவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் அவர் உயிருடன் இருப்பதற்கான உத்தரவாதம் தர முடியாது என தனியார் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தனது தந்தையை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.
Bus Accident: திண்டுக்கல்லில் ஸ்வீட் ஸ்டாலில் புகுந்த அரசுப் பேருந்து; அலறியடித்து ஓடிய பெண்கள்
அங்கு இருதய அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில், இரத்தக்குழாய் வீக்கம் கழுத்து வரை வளர்ந்ததோடு, இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ஸ்டென்டு பொருத்தும் அவசியமும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இருதய அறுவை சிகிச்சை குழு, மயக்க மருந்தவியல் குழு இணைந்து கழுத்துப்பகுதியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய ஸ்டென்ட் சிகிச்சை, தமனி வீக்கத்திற்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட மூன்று அறுவை சிகிச்சைகளையும் ஓரே முறை 8 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை? பிரேமலதாவின் பேச்சு சிறுபிள்ளை தனமாக உள்ளது - மாணிக்கம் தாகூர்
அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தற்போது சேகர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கூட இந்தளவுக்கு சிகிச்சை கொடுக்க முடியாத நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.