திருமண நிகழ்வில் பாயாசம் சரியில்லை; மணமகன், மணமகள் வீட்டார் பயங்கர மோதல்

சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசம் கேட்டு தகராறு இரு தரப்பினரும் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.

clash between 2 gangs in wedding event in mayiladuthurai district

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் - பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக சீர்காழி காவல் துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை செய்தனர். அப்போது நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்கள் உணவு சாப்பிட்ட பொழுது பாயாசம் போட்டுள்ளனர். அப்பொழுது பாயாசம் சரியில்லாததால் அதனை பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. 

பேருந்துகளில் சில்லறை பிரச்சினைக்கு முதல் முறையாக QR கோடு மூலம் தீர்வு கண்ட கோவை நடத்துநர்கள்

இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் கைகளைப்பாகி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள், சேர் போன்றவற்றை தள்ளிவிட்டு ரகலையில் ஈடுபட்டுள்ளனர். மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சீர்காழி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios