நாகையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது; சாராய ஊரல்கள், மதுபாட்டில்கள் பறிமுதல்
நாகை மாவட்டம் வேட்டைக்காரணிருப்பு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 50 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் வெளிமாநில மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹர்ஷ் சிங் பதவியேற்றுள்ளார். இவரின் அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் கள்ளச்சாரயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்படுவோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வேட்டைக்காரணிருப்பு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த சுரேஷ், கிரி, கலியமூர்த்தி ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து 50 லிட்டர் சாராய ஊரல்களை கைப்பற்றி தரையில் கொட்டி அழித்தனர். அதே போன்று உங்கள் எஸ்பி யிடம் பேசுங்கள் என்ற தொலை பேசி எண்ணிற்கு வந்த ரகசிய தகவலின் படி வெளிப்பாளையம் நல்லியான் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்
இது தொடர்பாக எஸ்பி ஹர்ஷ் சிங் கூறிய போது நாகை மாவட்டத்தில் சாராய விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்படுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். மேலும் இது போன்ற குற்றச் செயல்களை ஈடுபடுவோர் குறித்து தகவல் தெரிவிக்க உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அப்படி தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோரமண்டல் ரயில் விபத்துகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி கோரிக்கை