செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் ரைடு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த டிடிஎஃப் வாசன் அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தொடர்ந்து வாசனின் பாலோவர்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவரது வருமானமும் அதிகரித்தது. அதன் அடிப்படையில் அடிக்கடி சந்தையில் புதிதாக வரக்கூடிய விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி வீடியோ போட்டு வந்தார்.

இதனிடையே அண்மையில் அதிவேகமாக சென்ற வாசன் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து வெளியில் வந்த வாசன் புதிதாக கார் ஒன்றை வாங்கி தற்போது அந்த காரில் உலா வந்து கொண்டிருக்கிறார்.

Breaking: நொடிப்பொழுதில் போர்க்களமான டவுண் ரதவீதி; அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - நெல்லையில் பரபரப்பு

இந்நிலையில் கடந்த 15ம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து நெல்லைக்கு மதுரை வழியாக வாசன் பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு கையில் செல்போனில் பேசியபடியும், மற்றொரு கையால் காரை இயக்கிக் கொண்டும் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியதாகக் கூறி அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட வாசன், வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை உள்ளது. அதனை பார்த்து இளைஞர்கள் கெட்டுப்போக மாட்டார்களா? என்னை பார்த்து தான் கெட்டுப் போவார்களா? நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். மது போதையில் காரை ஓட்டி இருவரை கொன்றவனுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆனால் என் மீது வழக்கு பதியப்படுகிறது. நான் நீதித்துறையை தான் நம்பி உள்ளேன் என முழக்கமிட்டார்.

தலைக்கேறிய மதுபோதை; பெற்றோரிடம் தகராறு செய்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன் - ராமநாதபுரத்தில் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி, TTF வாசன் 10 நாட்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். காவல் துறையினர் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.