Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தின் நீராதார உரிமைகள் பறிபோவதை தமிழக முதல்வர் வேடிக்கை பார்க்கிறார் - பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாற்றில்  உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் கேரளா மீது தமிழக அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

tamil nadu government should strongly condemned kerala government on mullaperiyar dam issue said pr pandian in madurai vel
Author
First Published May 28, 2024, 4:00 PM IST

கேரளா அரசின் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக மதுரை தமுக்கம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக விவசாயிகள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு விவசாய அமைப்புகள், அதன் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் நீராதார உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு தீவிரமான சட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். 

கேரளா அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக தொடர வேண்டும். இந்த விஷயங்களில் தமிழக முதல்வர் வாய்மூடி மௌனியாக இருக்கிறார். கர்நாடகவில் மேகத்தாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசின் துணையோடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகளை கட்டி வருகிறது. அமராவதி ஆற்றுக்கு வரக்கூடிய சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுகிறது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகளை கட்டி முடித்துள்ளது. இதுபோன்று தொடர்ந்து பொருளாதார உரிமைகள் பறிபோவதை தமிழக முதல்வர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு; அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதி சரமாரி கேள்வி

இதனை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தான் முல்லைப் பெரியாறு நீர்ப்பாசன உரிமையை பாதுகாக்க பல்வேறு விவசாயிகளையும் விவசாய அமைப்புகளையும் ஒன்றுபடுத்தி வருகிறோம். ஆனால் தமிழ்நாடு அரசு தூங்குகிறது. அரசியல் வலிமை இருக்கிறது என்பதற்காக தமிழகத்தை ஆளுகின்ற அரசு இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. 

மத்திய அரசுக்கு தமிழக அரசு மறைமுகமாக துணை போகிறது என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த அச்சத்தின் விளைவால் தான் விவசாயிகள் நாங்கள் இன்று வீறு கொண்டு எழுந்திருக்கிறோம். மதுரையில் இன்று நடப்பது முதற்கட்ட போராட்டம். எங்களின் கோரிக்கை நிறைவேறுகிற வரையும், உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கிற வகையில் விண்ணப்பித்துள்ள கேரள விண்ணப்பத்தை நிராகரிக்கிற வரையிலும் எங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.

முல்லை பெரியாறு புதிய அணை தொடர்பான விவாதத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் - அன்புமணி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சொக்கிகுளத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் வரை பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் இந்த நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் மாரடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அளித்த உத்தரவின் நகலை எரிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios