தமிழிசைக்கு எதிராக பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட சோஃபியா மீதான வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
கடந்த 2018ம் ஆண்டு சென்னை - தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி அப்போதைய பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கமிட்டார்.
2018ம் ஆண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் மாணவி சோபியா மீது தூத்துக்குடி போலீசார் பதியப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு சென்னை - தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி அப்போதைய பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கமிட்டார். கீழே இறங்கி வந்து விமான நிலையத்திலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. விமானத்தில் கோஷமிட்டதற்காக சோஃபியா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமியா.? ஓ.பன்னீர்செல்வமா.? ஆட்டுகதையை கூறி பூங்குன்றன் கிளப்பிய புதிய சர்ச்சை..!
இதனையடுத்து சோஃபியா நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சோஃபியா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல்துறைக்கான சட்டப்பிரிவை தூத்துக்குடி போலீசார் பயன்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க;- இனிமே பூஜை செய்ய வந்த கொலை செய்து விடுவேன்.. ஜெ. தீபா மிரட்டுறாங்க.. கதறும் போயஸ் கார்டன் பூசாரி..!
இதுபோன்ற சட்டப்பிரிவுகளை சென்னை, கோவை போன்ற காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது. சென்னை காவல்துறை சட்டப்பிரிவை தூத்துக்குடி போலீசார் பயன்படுத்த அதிகாரம் இல்லை என வாதத்தை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சோஃபியா மீது பதியப்பட்ட சட்டப்பிரிவு பொருத்தமானது அல்ல. எனவே இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி தனபால் தெரிவித்துள்ளார்.