சாதிய மோதல்கள் குறித்து புகார்கள் வந்தால் அதிரடி நடவடிக்கை - புதிதாக பொறுப்பேற்ற டிஐஜி ரம்யாபாரதி எச்சரிக்கை

மதுரை சரகத்தில் ஜாதிய மோதல் தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி தெரிவித்துள்ளார்.

police officer ramya bharathi take a incharge at dig of madurai

மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறையை உள்ளடக்கிய மதுரை சரக காவல்துறை துணைத்தலைவராக ( டிஐஜியாக)  ரம்யாபாரதி மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள டிஐஜி அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் ஆகியோருடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரம்யா பாரதி, பழமையான தொன்மையான மாவட்டமான மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை  மேற்பார்வை பணியில் டிஐஜியாக பொறுப்பேற்றுள்ளேன். சட்டம் ஒழுங்கு பராமரிப்பை பாதுகாக்க புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். 

மாநிலத்தில் முதல் இடத்தை பெற்றது அனைவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்; திருச்சி மேயர் பெருமிதம்

தென் மண்டலத்தில் போதை பொருட்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள், சொத்துக்கள் பறிமுதல் போன்ற பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கைகள் தொடரும். ஜாதிய மோதல்கள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். ஜாதிய மோதல் தொடர்பான புகார் வந்தால் உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறையினர் எப்போதும் பொதுமக்களின் நண்பராக இருக்கிறோம். இரவில் ரோந்து பணி என்பது காவல்துறையில் மிக முக்கிய விஷயம். எனவே இந்த பணி எப்போதுமே தொடரும். நாங்கள் பாதுகாப்பு பணிகளின்போது பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகள் கேட்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

தேர்தல் வந்தால் தான் எங்கள் ஞாபகம் வருமா? எம்.பி. ஜோதிமணியை வறுத்தெடுத்த வாலிபரால் பரபரப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தலையாயக் கடமை என்பதை நிலை நிறுத்துவோம். தமிழக அரசு எந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதோ அதற்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios