மாநிலத்தில் முதல் இடத்தை பெற்றது அனைவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்; திருச்சி மேயர் பெருமிதம்
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டது, அனைவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று மாநகராட்சி மேயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருதுகள் வழங்குவது வழக்கமான நிகழ்வு. அந்த வகையில் சிறந்த 2 மாநகராட்சிகளுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தமட்டில் முதலிடம் பெறும் நகராட்சிக்கு ரூ.30 லட்சம், 2-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், 3-ம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
13 கருப்பொருளை மையமாக கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. பொது சுகாதாரம், முறையாக குடிநீர் வழங்குதல் - திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள், பயோ மைனிங் முறைப்படி குப்பை கிடங்கை சுத்தம் செய்வது,நகர அமைப்பு பணிகள்,நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள் போன்ற 13 சிறப்பு அம்சங்களை ஆய்வு செய்ததில் மாநிலத்திலேயே திருச்சி மாநகராட்சி முதலிடம் பிடித்தது.
தேர்தல் வந்தால் தான் எங்கள் ஞாபகம் வருமா? எம்.பி. ஜோதிமணியை வறுத்தெடுத்த வாலிபரால் பரபரப்பு
அதற்கான விருதை சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேயர் அன்பழகன், நல்லாட்சி நடத்தி வரும் தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் திருச்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டதில் பெருமை அடைகிறோம்.
நகராட்சி நிர்வாகத்துறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் கே.என்.நேரு திருச்சியை முன்மாதிரியாக மாநகராட்சிகள் மாற்ற வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. தமிழக முதல்வரிடம் நிதி பெற்று பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். மேயராக பொறுப்பேற்று திருச்சி மாநகராட்சியை சிறந்த வகையில் முன்னேற்ற நானும், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதனும் இணைந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு இந்த பரிசை பெற்றது பெருமை அடைகிறோம்.
ஜெயங்கொண்டத்தில் சாமி ஊர்வலத்தில் மோதல்; 5 பேர் அதிரடி கைது
ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி ஹிந்தூர்க்கு பிறகு திருச்சி மாநகராட்சி சுற்றுச்சூழல் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் பரிசை பெற முயற்சித்து வருகிறோம். அனைத்து மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மூலமாக இந்த பரிசை பெற்றுள்ளோம். ஆசியாவில் பெரிய பேருந்து நிலையத்தை போல சென்னையில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை போல திருச்சியில் வர உள்ளது. அதற்கான செயல் திட்டங்கள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திட்டத்தை கொண்டு வருவதற்காக நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார் என தெரிவித்தார்.