Madurai Metro Train: மதுரையில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு
மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 31 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள மெட்ரோ ரயில் வழித்தடம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 31 கிமீ தொலைவில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. தமிழக நிதிநிலை அறிக்கையில், மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.8,500 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், விரிவான திட்ட அறிக்கையின் முடிவில் அந்த தொகை ரூ.11,360 கோடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் மதுரையில் மெட்ரோ வழித்தட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையில் சகோதரர்கள் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; இளம்பெண் உள்பட 7 பேர் அதிரடி கைது
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு இந்த வங்கி கடன் அளித்துள்ளதால், அதற்கான தொடர் ஆய்வு பணிகள் நிமித்தமாக நேற்று சென்னை வந்திருந்த ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் குழு, மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்கள் குறித்து பார்வையிட திட்டமிட்டனர்.
முழுமை பெறாத அறிக்கையை வைத்து திமுக நீட் எதிர்ப்பு நாடகத்தை நடத்துகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு
அதன்படி இன்று மதுரையில் ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், ரயில்வே நிலையம், மாசி வீதிகள் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ச்சுனன், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் முதுநிலை போக்குவரத்து நிபுணர் வெங்யூ கு, சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொதுமேலாளர் ரேகா உள்ளிட்ட மெட்ரோ அதிகாரிகள் குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தினர்.