Asianet News TamilAsianet News Tamil

Annamalai: முழுமை பெறாத அறிக்கையை வைத்து திமுக நீட் எதிர்ப்பு நாடகத்தை நடத்துகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு

நீட் தேர்வு வந்த பிறகே அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, மாணவர்கள் பயனடைந்ததால் போலி பிம்பம் உடைந்துவிடும் என திமுக பயப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

bjp state president annamalai slams dmk government on neet exam vel
Author
First Published Jul 3, 2024, 12:18 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு AK ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. 

நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

சிவகங்கையில் சகோதரர்கள் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; இளம்பெண் உள்பட 7 பேர் அதிரடி கைது

bjp state president annamalai slams dmk government on neet exam vel

ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

திருச்சியில் ஓட்டுநரின் கவனக்குறைவால் தவறி விழுந்து உயிரிழப்பு? போலீஸ் விசாரணை

நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios