Asianet News TamilAsianet News Tamil

மதுரையில் மகளிர் கல்லூரி வாசலில் போதையில் இளைஞர்கள் ரகளை.. தட்டிக்கேட்ட மாணவியின் தந்தைக்கு அடி உதை.!

தேவர் ஜெயந்தி விழா அன்று மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்து அத்துமீறி கல்லூரி கேட்டை திறந்து பாதுகாவலர்களை தாக்கிய வீடியோ வைரலானது. 

madurai Womens college due to drunkenness Dispute...police Arrest
Author
First Published Nov 5, 2022, 1:55 PM IST

மதுரை அரசு மகளிர் கல்லூரி வாசலில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக் கேட்ட மாணவியின் தந்தை தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேவர் ஜெயந்தி விழா அன்று மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்து அத்துமீறி கல்லூரி கேட்டை திறந்து பாதுகாவலர்களை தாக்கிய வீடியோ வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மதுரையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இதையும் படிங்க;- திருமணமான 3வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை.. ரோட்டில் விழுந்து கதறிய மனைவி..!

madurai Womens college due to drunkenness Dispute...police Arrest

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலை கல்லூரி சாலையில் நேற்று முன்தினம் மாலை சில இளைஞர்கள் குடிபோதையில் டூவீலர்களில் ஹார்ன் அடித்து கொண்டும், கூச்சலிட்டு கொண்டும் அதிவேகமாக ஓட்டி வந்தனர். அதிவேகமாக வந்த டூவீலர்களைக் கண்டு அந்த ரோட்டில் சென்றவர்கள் அனைவரும் பீதியடைந்து ஒதுங்கினர். அந்தநேரம், கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகளும் பெரும் அச்சத்திற்கு ஆளாகி அலறினர். 

இதையும் படிங்க;-  மக்களே உஷார்! சென்னையில் ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழக்க இதுதான் காரணம்.. கலெக்டர் கூறிய அதிர்ச்சி தகவல்.!

அப்போது கல்லூரியில் படிக்கும் தன் மகளை அழைத்து செல்ல வந்த ஒரு தந்தை, டூவீலரில் கத்தி கொண்டு வந்த இளைஞர்களை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் டூவீலர்களை நிறுத்திவிட்டு மகளின் கண்முன்னே ஹெல்மெட் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். இதில், அவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், மதுபோதையில் தகராறு ஈடுபட்டு தாக்குதலில் ஈடுபட்ட ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம், நாகப்பிரியன், சதீஷ்குமார், அஜித்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க;-  இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!

Follow Us:
Download App:
  • android
  • ios