இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!
இடி மற்றும் மின்னல்களினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும் விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் ஊனங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இடி, மின்னலின் போது மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துகொள்வது எப்படி என்பது தொடர்பாக தமிழக அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இடி, மின்னல்களில் எப்படி நம்மை தற்காத்து கொள்வது என்பது தொடர்பாக தமிழக மாநில பேரிடம் மேலாண்மை முகமை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இடி மற்றும் மின்னல்களினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும் விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் ஊனங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இடி, மின்னலின் போது மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துகொள்வது எப்படி என்பது தொடர்பாக தமிழக அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க;- தமிழகம் முழுவதும் கொட்டிதீர்க்கும் மழை.. சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..
அதில், இடி மின்னலின் போது நீங்கள் திறந்த வெளியில் இருக்க நேரிட்டால் உங்கள் காதுகளை இறுக்கமாக மூடிக் கொண்டு தரையில் குத்து காலிட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டும். அப்படி உட்காரும்போது குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். தரைக்கு எவ்வளவு அருகாமையில் உட்கார்ந்து இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மின்னல் உங்களை தாக்குகின்ற வாய்ப்பு குறைவாக இருக்கும்.
இதையும் படிங்க;- மழை காலங்களில்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்!
காதுகளை இருக்க மூடி கொள்வதால் கேட்கும் திறன் பாதிப்படைவது குறையும். குதிக்கால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருந்தால் மின்னல் தரையில் தாக்கும் போது உருவாகும் மின்சாரம் உங்களின் ஒரு காலின் வழியாக புகுந்து இன்னொரு காலின் வழியாக வெளியேறிவிடும். இல்லையென்றால் அது உடல் முழுக்க சென்று உயிர் பாதிப்பை ஏற்படுத்தும்.
மின்னல் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?
முன்னறிவிப்புகள் எதுவும் இல்லாமல் மின்னல் தாக்கும். மின்னல் தாக்கும் போது நாம் செய்யக்கூடாதவை.
* மின்னலின் போது கூட்டமாக சேர்ந்து நிற்கக்கூடாது.
* குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது. அதன் வழியாக மின்சார பாயக்கூடும்.
* ஈரமான மரங்கள் தான் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் மின்னல்களின் போது உயரமான மரங்களில் கீழே நிற்க வேண்டாம் .
* திறந்தவெளியில் நிற்பதை தவிர்க்கவும்.
* கார், பேருந்து உள்ளிட்ட முழுமையாக மூடப்பட்ட வாகனங்களுக்குள் இருக்கும்போது இடி.மின்னல் தாக்காது.
* மின்னல் ஏற்படும்போது செல்போன், தொலைபேசி, டிவி. மிக்ஸி, கிரைண்டர், கணினியை பயன்படுத்தக்கூடாது.
* உயர் அழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.
* வெட்ட வெளியில் உலோகப் பொருட்களை உயயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது.
* மின்னலின் போது நீரில் இறங்கி நீந்தக் கூடாது. நீரை மின்னல் தாக்கினால் மின்சாரம் நீரின் வழியே உங்களைத் தாக்கும் தெரிந்து கொள்வோம்.. புரிந்து நடப்போம். பகிர்ந்து கொள்வோம்.
இதையும் படிங்க;- வானத்தை பிளந்துக் கொண்டு கொட்டிய மழை… 10 நிமிடத்தில் இவ்வளவா?