Asianet News TamilAsianet News Tamil

2024 ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து விழா கமிட்டியினரோடு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மதுரை மாவட்டத்தில் தை முதல் நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

madurai district collector conduct a meeting about jallikattu event on 2024 vel
Author
First Published Dec 23, 2023, 5:34 PM IST

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களிலும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதைத் தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் துறை ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தின் போது கேகே கண்ணன் என்பவர் ஒவ்வொரு முறையும் தென்கால் பாசன விவசாயிகளின் சார்பாகவே ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெறும். ஆனால் ஒரு சிலர் இடையூறு விளைவித்து கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமே நடத்தி வருகிறது. கிராம முறைப்படி எங்கள் சங்கமே ஜல்லிக்கட்டு நடத்த தாங்கள் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். 

மதுரையில் கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி; அரையாண்டு விடுமுறையை நண்பர்களுடன் கழித்தபோது சோகம்

காளையின் உரிமையாளர்களை பொறுத்தவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக டோக்கன் வழங்கப்பட்டாலும் கூட வரிசையின் படி மாடுகள் செல்லாமல் கடைசியில் இருக்கக்கூடிய மாடுகள் கூட முதலிடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது இது போன்ற குளறுபடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் எனவும் எந்தவித குளறுபடிகளுக்கும் இந்த முறை வாய்ப்பு இருக்காது. விழா குழுவினரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios