ஆதீன மடங்கள் அனைத்துமே இந்து அறநிலைத்துறை கட்டுப்பட்டது - மதுரை உயர்நீதிமன்றம் சரிமாரி கேள்வி!

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரி நிறுவனங்களுக்கு ஒத்திக்கு விட்ட ஒப்பந்த பத்திரத்தை இரத்து செய்யக்கோரி வழக்கில், மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரனை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 

madurai aadheenam land lease Case! - Madurai High Court barrage of questions!

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான மடமாக இருந்து வருகிறது இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை ஆதீனம் தரப்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள 1,191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு பவர் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதமானது எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஆதின மட சொத்துக்கள் தனியாருக்கு ஒத்திக்கு விடப்பட்ட ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்து ஆதின மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர்.

இது போன்று ஒத்திக்கு விடுவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது ஆதீன மடங்கள் அனைத்துமே இந்து அறநிலைத்துறை கட்டுப்பட்டது இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து அறநிலைய துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்த நீதிபதிகள், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சரமாரி கேள்வி எழுப்பினர்.

ஜெயலலிதா மரண விவகாரம் - 8 பேரை விசாரிக்க தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு !

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரனை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் ஏதும் அல்லபட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios