HCL Shiv Nadar : கலைஞர் கருணாநிதியே காரணம்.. நெகிழ்ந்த ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் !!
ரூ.215 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அனைவரும் வியக்கும் வகையிலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.73 ஏக்கர் நிலத்தில் 7 தளங்களுடன், அதிநவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.215 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மிக நுணுக்கமாகவும், கலைநயத்துடனும், அனைவரும் வியக்கும் வகையிலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
பிறகு பேசிய மு.க ஸ்டாலின், “சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில் அமைக்கப்பட்ட மருத்துவமனையும், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகமும். இவை இரண்டும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், தமிழ்நாட்டின் கலைநகராக திகழ்வது மதுரை. தலைநகரில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் கருணாநிதி அமைத்தார்.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
இன்று கலைஞர் நூற்றாண்டில் இந்த கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்னும் தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை இந்த அடியேன் அமைத்துள்ளேன். இந்த நூலகத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்ததை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்
இதனையடுத்து பேசிய ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், “கலைஞர் சொல்லிதான் தமிழ்நாட்டுல தொழில் தொடங்குனோம். கலைஞரை சந்தித்து உரையாடிய பிறகு தான் தமிழ்நாட்டில் நிறுவனம் துவங்கினோம். இன்று ஆயிரக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு கலைஞரே காரணம்.
கலைஞரை எனக்கு நன்றாக தெரியும். அவரை ஐந்து முறை சந்தித்து பேசியுள்ளேன். வசீகரமான பேச்சாளர்.நூலகத்தில் கலைஞர் எழுதிய புத்தகங்கள் நிறைய உள்ளது என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஷிவ் நாடார் பேசினார்.
ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இதை எதிர்பார்க்கல !!