VK Sasikala: எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் நேரில் சென்று வாழ்த்து பெறுவார் - ராஜன் செல்லப்பா
சசிகலா அரசியலை விட்டு விலகிச் சென்றால் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வாழ்த்து பெறுவார் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அதிமுக.வை வலுப்படுத்தும் முனைப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மாவட்ட வாரியாக கட்சியின் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதில் அதிமுக.வில் தற்போது பொறுப்பில் உள்ளவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீண்டும் அதிமுக.விற்குள் வரும் பட்சத்தில் கட்சி மீண்டும் சசிகலா வசம் சென்றுவிடும் என்ற எண்ணத்தில் சசிகலாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகில் எங்கு தான் உள்ளது கைலாசா? நித்தியானந்தா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அந்த வகையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சசிகலா தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை சந்திப்பவர்கள் யாரும் அதிமுகவினர் கிடையாது. அதிமுக பொதுச் செயலாளர் என்கிற பெயரையும், கொடியையும் பயன்படுத்த விடாமல் சசிகலா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக.விடம் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா வெற்றி பெற்றபோது பெரியாரிடம் ஆசி பெற்றதைப் போல சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டால் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வருவார். மேலும் சசிகலா போயஸ் கார்டனில் ஓய்வு எடுத்தால் மரியாதையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.