Nithyananda: காசு, பணம் தேவை இல்லை; கைலாசாவில் எல்லாமே ப்ரீ - கைலாசவாசியாக வாழ நித்தி அழைப்பு
சாமியார் என்று சொல்லப்படும் நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ள நிலையில் கைலாசா எங்கு உள்ளது என்ற அறிவிப்பை நாளை தெரிவிக்க உள்ளார்.
சர்ச்சை சாமியார் என்று அழைக்கப்படும் நித்தியானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. வழக்கு தொடர்பாக காவல் துறையினர் நித்தியானந்தாவை தேடி வரும் நிலையில், கடந்த 2019ம் ஆண்டே அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழக காவல் துறை தொடங்கி தேசிய புலனாய்வு அமைப்பு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கைலாசா ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் எந்த வகையிலும் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் கைலாசா எங்கு இருக்கிறது என்ற தகவலை குரு பூர்ணிமா தினமான நாளை (ஞாயிற்றுக் கிழமை) அறிவிப்பேன் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகத்தில் ஆய்வு என்ற பெயரில் நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்; பழனிசாமி விளாசல்
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்தியானந்தா தங்கள் நாட்டில் பணத்திற்கு மதிப்பு கிடையாது. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். கைலாசாவில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். செலவு கிடையாது.
திமுக முன்னாள் எம்.பி. வி.பி.சண்முகசுந்தரம் காலமானார்; அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
மக்களுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது. இந்த சட்டம் மாற்றப்படாது. காவல்துறை, ராணுவம் இல்லாத அகிம்சை தேசசமாக கைலாசா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கைலாசாவில் உள்ள மடங்கள் பற்றி கூறிய அவர் மகா கைலாசா என்னும் இடத்தில் இருந்து நாட்டை நிர்வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.