நிவாரண பொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் விலக்கு வேண்டும் - செல்லூர் ராஜூ கோரிக்கை
நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமை்சசர் செல்லூர் கே. ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லாரிகள் மூலம் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நிவாரணப் பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை வழியனுப்பி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில், "சென்னையில் 2015ம் ஆண்டு 130 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத மழை பெய்தது.
2015ல் ராணுவ தளபதி போல ஜெயலலிதா மீட்புப் பணிகளை மேற்கொண்டதாக என அனைவரும் பாராட்டினார்கள். சென்னை மழை வெள்ளத்தால் பல இடங்கள் தீவை போல காட்சி அளிக்கிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கோபத்தில் உள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
ஆத்தா எனக்கு நல்ல புத்திய குடு; அம்மனின் தாலியை திருடிவிட்டு சாமியிடமே வேண்டுதல் நடத்திய ஆசாமி
நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 ஆயிரம் கோடி செலவழித்ததற்கான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் விபரங்களை தமிழக அரசு மறைத்து வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.