திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சித்ரா மற்றும் இரண்டாம் மனைவி பேச்சியம்மாள் ஆகியோருடன் திருப்பூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இரண்டாவது மனைவி மூலம் இவருக்கு 8 மாதத்தில் பெண்குழந்தை ஒன்று உள்ளது. ராஜதுரை அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

தினமும் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வந்து மனைவிகளிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சம்பவத்தன்றும் குடித்து விட்டு தகராறு செய்யவே, இரண்டாவது மனைவி பேச்சியம்மாள் கணவருடன் சண்டையிட்டு, 8 மாத பச்சிளம் குழந்தையை அவரிடமே விட்டுட்டு திருநெல்வேலியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக குழந்தையுடன் திருநெல்வேலிக்கு கிளம்பியிருக்கிறார் ராஜதுரை. அப்போதும் அதிமான போதையில் இருந்த அவரை மதுரை திருமங்கலம் பேருந்துநிலையத்தில் நடத்துனர் இறக்கிவிட்டுள்ளார்.

இந்தநிலையில் உச்சகட்ட போதையில் இருந்த ராஜதுரை, பேருந்து நிலையத்தில் அமர்ந்து பச்சிளம் குழந்தையை கூவி கூவி விற்கத்தொடங்கியுள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் ராஜதுரையும் குழந்தையையும் மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின் குழந்தையின் தாய் பேச்சியம்மாள் வரவழைக்கப்பட்டு குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. குடிபோதையில் இருந்த ராஜதுரையை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் சரி.. சட்டத்துக்குள்ள கொண்டு வாங்க..! அன்புமணி ராமதாஸ் அதிரடி..!