Madurai Constituency: 1.90 லட்சம் வாக்கு வித்தியாசம்; சொல்லி அடித்த எம்.பி. வெங்கடேசன் - மதுரையில் ஆரவாரம்
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான சு.வெங்கடேசன் சுமார் 1.90 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 18 சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில், எண்ணப்பட வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை விட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் சு.வெங்கடேசனின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Coimbatore Constituency: சொல்லி அடித்த திமுக; கோவையில் 500 பேருக்கு ஆடு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்
தற்போது 18ஆம் சுற்று முடிவு வரை சு.வெங்கடேசன் 4 லட்சத்து 03 ஆயிரத்து 587 வாக்குகள் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் 2 லட்சத்து 7 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்றுள்ளார். இவர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 954 ஆகும். மேலும் 1லட்சத்தி 54 ஆயிரத்து 661 வாக்குக்களுக்கான முடிவுகள் மட்டுமே இன்னும் வெளிவர உள்ள நிலையில் சு.வெங்கடேசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன்; வாடிய முகத்தோடு வெளியேறிய நயினார் நாகேந்திரன்
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சு.வெங்கடேசன் கடந்த முறை பெற்ற வெற்றியை காட்டிலும் இந்த முறை 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்வோம் என்று தெரிவித்து இருந்தார்.