Asianet News TamilAsianet News Tamil

Nainar Nagendran: மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன்; வாடிய முகத்தோடு வெளியேறிய நயினார் நாகேந்திரன்

நெல்லை தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

tirunelveli bjp candidate nainar nagendran walk out from vote counting booth with sad face vel
Author
First Published Jun 4, 2024, 12:48 PM IST | Last Updated Jun 4, 2024, 12:48 PM IST

நாடு முழுவதும் 7 கட்டங்களாக பதிவான மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது. நெல்லை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் சார்பில் சத்தியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

Durai Vaiko: மக்களே எஜமானர்கள்; வெற்றி முகத்தில் துரைவைகோ பேட்டி

இந்நிலையில் நெல்லை தொகுதியில் ஆறு சுற்று முடிவுகள் வெளியான நிலையில், தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வருகிறார். சராசரியாக சுமார் 30000 வாக்குகள் அதிகம் பெற்று ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார். அதேசமயம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

Thirumavalavan: சிதம்பரம் தொகுதியில் திருமா தொடர்ந்து முன்னிலை; தொண்டர்கள் உற்சாகம்

இதுபோன்ற நிலையில் நயினார் நாகேந்திரன் வாக்கு எண்ணும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதுவரை வெளியான முடிவில் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார். இனி முடிவுகள் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் அளித்த முடிவு எதுவாக இருந்தாலும் அதை வரவேற்கிறேன். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios