மதுரை அரசு மருத்துவமனையில் அவலம்: சிகிச்சைக்காக வந்த நபரை சாலையோரம் வீசிச் சென்ற ஊழியர்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்காக வந்த நோயாளி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Discharge of patient without treatment at Madurai Government Hospital

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நோயாளி ஒருவர் அழுகிய கால்களுடன் உடலில் தெம்பில்லாமல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அவரை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததாலும், அவரது கால்கள் அழுகிய நிலையில் இருந்ததால் அவற்றில் ஈ மொய்த்த காரணத்தினாலும் அவருக்கு அருகில் யாரும் செல்லவில்லை. இந்நிலையில், மருத்துவமனை ஊழியர் ஒருவர் அந்த நோயாளியை சக்கர நாற்காலியில் அமர வைத்து பிணவறை அருகே உள்ள வாயில் வழியாக வெளியே அழைத்து வந்து சாலையோரம் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
மதுரையில் பழனிச்சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பி நேரலை செய்த இளைஞர் கைது

நடக்க சக்தி இல்லாத காரணத்தால் கால்களில் ஈ மொய்த்தபடி அவர் அங்கேயே படுத்துக் கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி தன்னார்வலர்கள் சிலர் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர். மேலும் அவருக்கு புது துணி வாங்கிக் கொடுத்து அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தனர்.

பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு - பக்தர்கள் பரவசம்c

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நபர் மருத்துவமனை ஊழியர்களாலேயே வெளியேற்றப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios