மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிவு… ஒப்பந்த தொழிலாளர் பலி!!
மதுரையில் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கூடல் நகரில் உள்ள அசோக் நகர் பகுதியில் நிலத்தடி குழாய்களை சரிசெய்யும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்களுடன் 35 வயதான சக்திவேல் என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது திடிரென மணல் சரிந்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை அறிக்கை.. பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்ட அறிவிப்பு..
இதில் குழிக்குள் சிக்கிய சக்திவேல் மண்ணில் புதைந்தார். இதை அடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சக்திவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சக்திவேலின் உடல் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: டிக்டாக் வீடியோ போடாத.! சினிமா துணை நடிகையை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்.!
முன்னதாக மதுரை அசோக் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சக்திவேல் உட்பட மூன்று பேர் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோண்டப்பட்ட பள்ளத்தில் மணல் சரிந்துள்ளது. இதை அடுத்து குழியில் இருந்த 2 தொழிலாளர் வெளியேறினர். சக்திவேல் மண் சரிவில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.