மனு கொடுத்துவிட்டால் ஆளுநர் ஆட்சியை கலைத்துவிடுவாரா? நாங்கள் சும்மா விடுவோமா? முத்தரசன் ஆவேசம்

கள்ளக்குறி்ச்சி விஷசாராய விவகாரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலால் அரசியலாக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

communist party of india state secretary mutharasan slams AIADMK and Bjp in madurai vel

மதுரை மாவட்டம், உத்தங்குடியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இரா.முத்தரசன் கூறுகையில், “இந்தியாவில் தலைசிறந்த மருத்துவர் உருவாக்க வேண்டும் என நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். நீட் தேர்வுகள் வருவதற்கு முன்னதாகவே தலைசிறந்த மருத்துவர்கள் சேவை ஆற்றி வருகிறார்கள். 

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்று உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோதே நீட் தேர்வுகளின் முன்னதாகவே முடிவுகள் வெளியிடப்பட்டதற்கான காரணங்கள் தெரியவில்லை. நீட் தேர்வு குளறுபடிக்கு ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து விட முடியாது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், நீட் தேர்வு தேவையில்லை எனும் கருத்து தமிழகத்தை கடந்து பல மாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட்டு தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒரு கோடி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். 

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கொசுவத்தி; கட்டிலோடு சேர்ந்து கருகிய பரிதாபம்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான முறையில் நிவாரணம் வழங்கப்படுகிறது. குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் அரசியல் செய்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் பதவி விலக வேண்டும் என அறிக்கை விட வேண்டுமென அதிமுகவும் பாஜகவும், நினைக்கிறது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனி்சாமி ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்திருக்கும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். 

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள், மதுவிலக்கு பிரிவில் உள்ள காவல்துறை கருப்பு ஆடுகள் சாராய வியாபாரிகளிடம் இருந்து வாரம்தோறும் பணத்தை பெற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறார்கள். கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய காவல் துறையினர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வின் பின்னர் தவறு செய்தவ காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ளச்சாராய உயிர் இழப்பு விவகாரத்தில் பாஜக ஆளுநரை சந்தித்து அரசியல் செய்கிறது.

Shocking Video: கவனக்குறைவாக சாலையை கடந்த XL வாகனம்; அசுர வேகத்தில் வந்து அடித்து தூக்கிய தனியார் பேருந்து

கள்ளச்சாராய விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை சந்தித்து தானே பாஜக மனு கொடுத்திருக்க வேண்டும். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தி இருக்கலாமே? பாஜக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் ஆளுநர் ஆட்சியை கலைத்து விடுவாரா?, அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் எல்லாம் சும்மா விட்டு விடுவோமா?, எடப்பாடி பழனிச்சாமியும், அண்ணாமலையும் மலிவான அரசியலை செய்து வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மக்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios